"ஹலோ தலைவரே... சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் "படையப்பா' ரீ-ரிலீஸோடு கோலாகலமாக நடந்து முடிந்திருக்கும் நிலையில் அந்தத் திசையிலும் சலசலப்பு தெரியுது.''”

Advertisment

"ஆமாம்பா, அவரது ராகவேந்திரா மண்டப ஊழியரே மோசடி செய்வதாகப் புகார் எழுந்திருக்கிறதே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, ரஜினி ரசிகரான கோவை மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கே.சௌந்தர் இது குறித்து ரஜினிக்கே ஒரு கடிதத்தை அனுப்பி வைத்திருக்கிறார். ரஜினியின் ராகவேந்திரா கல்யாண மண்டப ஊழியர்கள் மீதே இப்படி ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். அவர் எழுதிய கடிதத்தில்,’"ரசிகர்களின் குழந்தை களுக்கான கல்வி உதவித் தொகையைத் தாங்கள் செய்துவருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஊக்கத் தொகையில் தற்போது பல்வேறு முறைகேடுகள் நடந்துவருகிறது. இந்த மோசடி களில் முக்கிய பங்கு வகிப்பவர்  ராகவேந்திரா மண்டப ஊழியர் சம்பத். இவர், ரஜினி மக்கள் மன்றமாக இருந்தபோது அப்போதைய மாநில நிர்வாகி அமரர் சுதாகருடன் இணைந்து ரசிகர்களிடம்  இலட்சக்கணக்கில் பணத்தை வாங்கி மோசடிகள் செய்துவந்தார். இப்போது, இவருடன் காஞ்சிபுரத்தைச் சார்ந்த பாபு என்கிற நபரும் இணைந்து பல்வேறு மோசடிகளைச்  செய்து வருகிறார். இந்த பாபு நமது மண்டப ஊழியரா? அல்லது அகில இந் திய ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகியா என்று தெரியவில்லை? அவரது அலப்பறையையும் தாங்க முடியவில்லை. எந்த உதவியையும் ரசிகர்மன்ற மூத்த நிர்வாகி        களின் மூலமாக வழங்குங்கள்'’என்று தெரிவித்திருக்கிறார். இது ரஜினி சார் கவனத்திற்கு கொண்டு சென்றார்களா? தெரியவில்லை என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.''”

"வருத்தமாகத்தான் இருக்கு. அமலாக்கத் துறை ஐந்து தி.மு.க. அமைச்சர்களிடம் அதிரடி காட்டவிருக்கிறது என்கிறார்களே?''”

Advertisment

"தமிழக முக்கிய இலாகாக்களில் இருக்கும் அமைச்சர்கள் ஐந்துபேரை குறிவைத்து அமலாக்கத்துறை தனது நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறதாம். இவர்கள் குறித்த வழக்கை ஏற்கனவே பதிவுசெய்து, விசாரணை, ஆவண சேகரிப்பு என முக்கிய வேலைகளை முடித்துத் தயாராக இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லியிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைத்ததும், அதிரடி காட்டுவார்கள் என்கிறது அந்த டெல்லி செய்தி. இப்படி தேர்தலுக்கு முன்பாகவே, பெரும்பாலான தி.மு.க. அமைச்சர்களின் இமேஜை உடைத்தெறிவதுதான் டெல்லியின் திட்டம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் நாங்கள் எதற்கும் தயார் மோதி பார்த்துவிடுவோம் என்று தமிழக முதல்வரும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்கிறாராம்.''”

"பா.ஜ.க.வுக்கும் விஜய்க்கும் இடையே அதிரடியான ரகசிய டீல் ஒன்று போடப்பட்டி ருக்கிறது என்கிறார்களே?''”

"நடிகரான த.வெ.க. தலைவர் விஜய், பா.ஜ.க.வுடன் ரகசிய டீல் போட்டுக் கொண்டிருக் கிறாராம். வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.விடமிருந்து விலகி நின்று களம் காணும் த.வெ.க., அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளுமாம். அதற்குள் இந்தத் தேர்தலில் வலுவாகிவிட வேண்டும் என்று விஜய்க்கு டெல்லி அறிவுறுத்தியிருக்கிறதாம். அதேபோல் எப்       போதும் விஜய் பொதுக்கூட்டத்திற்கு கரன்ஸி பாசனம் செய்யும் ஆதவ் அர்ஜுனுக்குப் பதில், 18ஆம் தேதிக்கான முழுச்செலவையும் செங் கோட்டையனே ஏற்றிருக்கிறாராம். காரணம், இந்தக் கூட்டம், தன் எதிர்காலத்தையும் தீர்மானிக்கிற கூட்டம் என்று கருதினாராம் செங்ஸ். எச்சிக்கையில் காக்கா ஓட்டாதவர்தான்  செங்ஸ். இ.பி.எஸ்.ஸுக்கும் இவருக்கும் லடாய் வந்ததே இந்த காசு பிரச்சினையில்தான். கையிலிருந்து காசு எடுக்கமாட்டேன்கிறார் என்பதால்தான் அ.தி.மு.க.விலிருந்து வெளியே வந்தார். ஆனால் இதுல இவரே எல்லா செலவும்ங்கிறது ஆச்சரியமாக இருக்குதாம்.''

"மோடி தமிழகம் வருவதற்கான ஏற்பாடுகள் நடக்குதே?''”

"தமிழ்நாட்டு சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி மத்தியில் ஆளும் பா.ஜ.க தலைவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வந்து செல்வது தொடர்கிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடிக்கடி வருகிறார். தமிழக பா.ஜ.க தலைவர்களையும் டெல்லித் தலைவர்கள் அங்கே அழைத்து ஆலோசித்து வருகின்றனர். தேர்தலை மையப்படுத்தி ”"தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்'” என்ற பயணத்தை மாநில பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தி வருகிறார். இதன் நிறைவுவிழா புதுக்கோட்டையில் நடக்கவிருக்கிறது. அதில் பிரதமர் மோடி  மற்றும் அமித்ஷா ஆகியோரை பங்கேற்க வைக்கும் முயற்சிகளும் நடக்கிறது. அதற்காக புதுக்கோட்டை புறநகரில் திருச்சி சாலையில் ஏற்கனவே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டம் நடத்திய அதே தனியார் இடத்தில் 62 ஏக்கர் பரப்பளவு தேர்வு செய்யப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது. அந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.'' ”

"இந்த முறை காரைக்குடியில் நாம் தமிழர் சீமான் களமிறங்கத் திட்டமிட்டி ருக்கிறார் என்கிறார்களே?''”

rang2

"காரைக்குடியில் நடந்த மாவீரர் தின விழாவில் மாவட் டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் களை அறிவித்தார் சீமான்.  காரைக்குடியில் அவரே நிற்க நினைப்பதால் அதை மட்டும் அவர் அறிவிக்க வில்லை. காரணம், கடந்த நாடாளு மன்றத் தேர்த லின் போது, காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் ஏறத் தாழ  17 ஆயி ரம் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றதால், இந்தத் தொகுதியை அவர் கருத்தில் வைத்திருக் கிறாராம். அதேசமயம்,  இங்குள்ள நிர்வாகி களான மாறனும், சாயல் ராமுவும் எதிரும் புதிரு மாக இருக்கிறார்களாம். இப்படி இருந்தால், இங்கே சீமானே நின் னாலும் சங்கடம்தான் என்கிறார்கள் ஏரியாவில் உள்ள நாம் தமிழர்கள்.''”

"காங்கிரஸில் கட்சிப் பதவியைக் கேட்டு மொய்க் கிறாங்களேப்பா?''”

"ஆமாங்க தலைவரே,  தமிழக காங்கிரஸ் கட்சிக்கு புதிய மாவட்ட தலை வர்களைத் தேர்வு செய்வதற் காக, மேலிடப் பிரதிநிதிகள் 36 பேர் கடந்த மாதம் நியமிக்கப்பட்டனர். ஒரு மாத காலம், இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தி, புதிய தலைவர்களுக் கான  தலா 3 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை டெல்லி மேலிடத்திடம் ஒப்படைச்சிருக்காங்க. தேர்தல் நெருங்கி வருவதால், புதிய மாவட்ட தலைவர்களை இந்தப் பட்டியலில் இருந்து விரைந்து அறிவிக்க இருக்கிறது காங்கிரஸ் தலைமை. இதற்குத் தோதாக, இந்த புதிய தலைவர்கள் நியமனம் குறித்து கே.சி.வேணுகோபால் தீவிரமாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். எனவே, இந்த மாவட்டத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றும் வேகத் தோடு கட்சிப் பிரமுகர்கள் பலரும் டெல்லியில் முகா மிட்டிருக்கிறார்களாம்.''” 

"காங்கிரஸ் சிட்டிங் எம்.எல்.ஏ.க்க ளில் நாங்குனேரி ரூபி மனோகரன் தொகுதி மாறும் முயற்சியில் இருக்கிறாராமே?''”

"ரூபி மீது அவரது மாவட்ட காங்கிரஸ் தொண்டர்கள் பல்வேறு அதிருப்தியில் இருக்காங்க. அதனால் மீண்டும் சிட்டிங் தொகுதி கிடைக்காதுன்னு அவர் நினைக்கிறார். அப்படியே கிடைச்சாலும் அங்கே வெற்றிபெற முடியாதுன்னு அவர் நினைக்கிறார். அதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியை வாங்க அவர் கடும் முயற்சியெடுத்து வருகிறார். இதற்காக டெல்லியில் முகாமிட்டு கட்சியின் மேலிடத் தலைவர்கள் பலரையும் சந்தித்து "லாபி' செய்து வருகிறாராம். அதேபோல், தான் நினைத்த மாதிரியே ஒரு தொகுதி கிடைக்கணும்னு, அவர் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகையையும் பலவகையிலும் கவனித்து வருகிறாராம். ரூபியின் இந்த முயற்சிகளை கட்சிப் பிரமுகர்கள் கூர்ந்து கவனிச்சிக்கிட்டிருக்காங்களாம்.''”

"ராஜ்யசபா பதவி காலியாகும் நிலையில் இருக்கும் த.மா.கா. வாசன், மீண்டும் அ.தி.மு.க.விடம் முட்டி மோதுகிறார் போலிருக்கே?''”

"தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடையுது.  அந்த 6 பேரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும் ஒருவர். அ.தி.மு.க. சார்பில் எம்.பி.யானவர் வாசன். மீண்டும் அ.தி.மு.க.விடம் இந்த முறையும் பதவியை எதிர் பார்க்கிறார். ஆனால் அ.தி.மு.க. சீனியர்கள் பலரும், ’நமக்கு இருப் பதே இரண்டு ராஜ்யசபா சீட்தான். அதில் ஒன்றை மீண்டும் வாசனுக்கே தூக்கிக் கொடுத்துடக்கூடாது’ என்று எடப்பாடி யிடம் வலியுறுத்திவருகிறார்கள். அ.தி.மு.க. சீனியர்கள் தனக்கு சீட் கிடைக்க குறுக்கே நிற்பதைப் பார்த்த வாசன், ’"நீங்கதான் எடப்பாடியிடம் பேசி, மீண்டும் எனக்கு ராஜ்யசபாவை வாங்கிக்கொடுக்கணும்'’என்று பிரதமர் மோடியிடம் நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கவிருக்கிறாராம். அதேசமயம் தே.மு.தி.க.வை, அ.தி.மு.க. கூட்டணியில் தக்கவைக்க, அதற்கு ஒரு ராஜ்யசபாவைத் தர எடப்பாடி முடிவெடுத்திருக்கிறாராம்.''”

"திருட்டில் மீட்கப்பட்ட தங்கத்தில் போலீஸ் டீமே கை வைத்திருக்கிறதாமே?''” 

"கடந்த ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதியன்று காரைக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே, மதுரை நகை வியாபாரி விஜயராஜாவிடம் 1.4 கிலோ எடையுள்ள தங்கத்தை அபிமன்யு, சேட்டான் பிரசாத், துக்காராம், ரிஷிகேஷ் மற்றும் சுமித் ஆகியோரை கொண்ட டீம் ஆட்டையப் போட்டது. அன்றுதான் காரைக்குடி துணைச் சரக உதவி எஸ்.பி.யாக ஆஷிஷ் புனியா பணியேற்றுக்கொண்டிருந்தார். நாம் பணியேற்ற நாளிலா இந்த விவகாரம்.? என அவர் தலையில் கைவைத்த நிலையில்... நாங்கள் இருக்கின்றோம் என அடுத்த இரண்டு வாரத்திற்குள்ளேயே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து ஆஜர்படுத்தியது தனிப்படை டீம். உதவி எஸ்.பி. ஆஷிஷ் புனியாவும் காலரை தூக்கிவிட்ட நிலையில், "சார்... கொள்ளை போனது சரியாக 1.4 கிலோ தங்கம். எனக்கு திரும்ப கிடைத்தது 1.100 கிலோ மட்டுமே. மிச்ச சொச்சத்தையும் கொடுத்துடுங்க'’என்ற அந்த நகை வியாபாரி, இது குறித்து டி.ஜி.பி. வரை புகார் அனுப்பியிருக்கிறாராம்.''”

"திருவண்ணாமலை இளைஞரணி மாநாட்டை நடத்தி பேரை தட்டிட்டுப் போயிருக்காரே எ.வ. வேலு?''”

"ஆமாம் தலைவரே, தேர்தல் நெருங்கி வர்றதையொட்டி திருவண்ணாமலையில் தி.மு.க.வின் இளைஞரணி மாநாட்டுக் கூட்டம் நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத் துக்கும் அதிகமான பேர் இந்த மாநாட்டுக்குத் திரண்டுவந்த நிலையில், திருவண்ணாமலையில் போக்குவரத்து நெரிசல்கூட ஏற்படாத வகையில் திட்டமிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு வரும் வாகனங்களை ஒழுங்குபடுத்த 3 வழி பாதைகள் விரிவுபடுத்தப்பட்டும், மாநாட் டுக்கு வரும் கூட்டம் நெரிசலில்லாத வகையில் சாப்பிட ஏற்பாடு செய்தும் அசத்தியிருந்தார் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு. கரூரில் த.வெ.க. கூட்டத்தில் வெறும் 25,000 பேர் திரண்டதற்கே 41 உயிர்கள் பலியான நிலையில், திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப் பட்டதாலும், தொண்டர்கள் ஒழுங்குடன் நடந்துகொண்டதாலும்  ஒன்றரை லட்சம் பேர் வந்தும், எந்தச் சிக்கலுமில்லாமல் தொண்டர்கள் மாநாடு வந்துதிரும்பியது பலரையும் வியப்புக்குள்ளாக்கி யிருக்கிறது. அனுபவத்தோடயும் நிதானத்தோடயும் நிகழ்வைத் திட்டமிட்ட அமைச்சரையும் அவருக்கு உதவியவர்களையும் முதல்வர் பாராட்டியிருக்காராம்.''”

"தைலாபுரம் நிர்வாகக் குழு கூட்டத்தில் மருத்துவர் ராமதாஸ்  அன்புமணியை வெளுத்துவாங்கிட் டாராமே?''”

rang1

"நிஜம்தான் தலைவரே... தொடர்ச்சி யாக அன்புமணியின் அத்துமீறல்களால் கொதித்துப்போயிருந்த ராமதாஸ், மகனென்றும் பாராமல், ‘"அன்புமணி வாய் திறந்தால் பொய், ஆயிரக்கணக்கான பொய். ஜனநாயக முறைப்படி இந்தக் கட்சியை நாங்கள் வளர்த்துவருகிறோம்  .............. கையிலே கிடைத்த பூமாலை என்று சொல் வார்கள். கோடிட்ட இடத்திலிருக்கும் வார்த்தையை நீங்களே போட்டுக்கொள்ளுங்கள். உனக்கும் இந்தக் கட்சிக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வியர்வை சிந்தி உழைத்து, இந்தக் கட்சி ஆலமரமாக உருவாகியிருக்கிறது. அந்த ஆலமரத்தையே வெட்ட நினைக்கிறாய். தவறான புள்ளிவிவரங்களை கொடுத்து தேர்தல் கமிஷனையே ஏமாற்றியிருக்கிறார்கள். இவர்கள் யாரைத்தான் ஏமாற்றமாட்டார்கள். இந்த பம்மாத்து வேலை செய்பவர்களை இந்த நேரத்தில் எச்சரிக்கிறேன்'’ என்றவர், "சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுப்பீர்களா?' என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு, ‘"தீர்ப்பு தெளிவாக இருக்கு. சிவில் கோர்ட்டுக்கு போகவேண்டிய அவசியமில்லை'’ என நெத்தியடியாகப் பதிலளித்தார். மேலும், அன்புமணி மீதான இந்தூர் மருத்துவக் கல்லூரி ஊழல் குறித்து சி.பி.ஐ. தீர விசாரிக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்து, அன்புமணி தரப்பை அலற வைத்திருக்கிறார்.''”

"நானும் என் கவனத்துக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். கோவை பகுதியில் கல்லூரி மாணாக்கர்களுக்காக இயங்கிவந்த மேட்டுப்பாளையம்,  சிங்காநல்லூர், பாலசுந்தரம் சாலை, சுங்கம் உள்ளிட்ட 9 சமூக நீதி விடுதிகள் சமீபத்தில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன.  இவற்றை அணு அணுவாய் கவனிக்கவேண்டிய வார்டன்கள், காலை 10 மணிக்கு பஞ்ச் வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்களாம். இதனால் மாணக்கர்களை கண்காணிக்க ஆளே இல்லா நிலை. சமீபத்தில் ஆய்விற்காக மாவட்ட ஆட்சியர் வருகின்றார் என்ற தகவல் வர...  வார்டன்கள் ஓடிவந்து ஆஜர் ஆகிவிட்டு, மீண்டும் எஸ்கேப் ஆகிவிட்டார் களாம். எனவே இந்த விவகாரம் குறித்து, சமூக நலத்துறை அமைச்சருக்கு புகார்கள் பறந்திருக்கின்றனவாம்.''